ரயில்டிக்கெட் வாங்கும் கூட்டம்.
அழுக்குப் பாவாடைசிறுமியின்
மடியில் சிரித்தமுகக் குழந்தை,
கிள்ளப்பட்ட வலியில்
உரத்து அழுதது.
அலுமினியத் தட்டில்
விழ ஆரம்பித்தன
சில்லறைக் காசுகள்.
October 4, 2007
பிச்சைப் பொத்தான்
Posted by பிரகாஷ் at 10:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கவிதை நன்று.. உங்கள் கவிதை ஜெயமோஹனின் ஏழாம் உலகத்தை நினைவுபடுத்துகிறது.. நமது மனநிலையை பிரதிபலிக்கிறது இக்கவிதை.
Prakash
This shows your keen observation.
Nice
Go Ahead
Raji.S
நன்றி ராஜலட்சுமி.
நன்றி ஜெயக்குமார்.
ஜெயமோகனின் நிறைய புத்தகங்களை
நான் இனிமேல் தான் படிக்கவேண்டும்,
ஏழாம் உலகம், விஷ்ணுபுரம் உட்பட.
பிச்சைப் பொத்தான்,அந்தேரி ரயில் நிலையத்தில் போனவாரம் நான் கண்ட காட்சியின் விளைவு.
ஜெயமோஹனை " விஷ்னுபுரத்திலிருந்து" ஆரம்பியுங்கள். பின்னர் ரப்பர், மாடன் மோட்சம், ஏழாம் உலகம், பின்னர் ஜெயமோஹனின் கட்டுரைகள், மரத்தடி குழுமத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி, திண்ணையில் அவரது படைப்புகள் படிக்கவும். நீங்கள் அவரது தீவிர வாசகனாவது தானாகவே நிகழும். நமது காலத்திய அருமையான எழுத்தாளர் ஜெயமோஹன்.
திண்ணையில் ஜெயமோஹன்..
http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+????????
மரத்தடியில் ஜெயமோஹன்..
http://www.maraththadi.com/ListArticle.asp?TypeId=55
வாழ்த்துக்கள் ப்ரகாஷ்..
நன்றி ஜெயக்குமார்.
மரத்தடி பேட்டியை முன்பே படித்து இருக்கிறேன்.
மற்றவைகளை இனி படிக்கிறேன்.
//கிள்ளப்பட்ட வலியில்
அழுதது குழந்தை.
விழுந்தன சில்லறைக் காசுகள்.//
இதைத்தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் அதிகம். :D
//இதைத்தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் அதிகம். :D//
ஒரு வளரும் எழுத்தாளனை முளையிலேயே கிள்ளும் முயற்சி இது...
//இதைத்தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் அதிகம். :D//
ஒரு வளரும் எழுத்தாளனை முளையிலேயே கிள்ளும் முயற்சி இது...
பிரசன்னா,
அழகான திருத்தம்.
கச்சிதமான நகாசு வேலை.
நன்றி.
சுப்ரமணியசாமி,
கருத்துக்கு நன்றி.
After reading the poetries of Pa. Vijay, Vairamuthu said, "Kavithai vadivil ezhuthappatta urai nadai ellam kavithai aagi vidadhu". People will watch right from a letter, to the word, to the sentence, to the full stop and to the meaning of it. So take utmost care in your publications.
Post a Comment