முகத்தில் வந்தறைந்து
விழி சிவக்க மண் வீசி
எடுப்பான கேசத்தை
ஏளனமாய்க் கலைத்து
இடுப்பு வேட்டியை
இழுத்து உருவிட,
ததும்பிய கோபம்
தலைக்கேறிப் போனாலும்,
ஒன்றும் செய்வதற்கில்லை-
குழந்தை,காற்று.
October 4, 2007
ஒன்றும் செய்வதற்கில்லை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆடிக் குடத்தடையும்,
ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும்
ஓடி மண்டை பற்றிப் பர பர வெனும்,
பாரில் பிண்ணாக்குமுண்டாம்,
உற்றிடுபாம்பெள்ளெனவே ஓது...
ஜெயக்குமார்
நிறைய கவிதைப் புத்தகங்களை வாசிக்கவும்.
நன்றி பிரசன்னா.
எம்.பி.ஏ.படிப்பும்,மார்க்கெட்டிங் பணியும், (நிகழ்கால) கவிதைக்கும் எனக்குமான தூரத்தை அதிகமாக்கியதாக உணர்கிறேன்.
இரு வாரங்களில்,எனது சென்னை வருகையின் போது, தெரிந்தெடுத்த கவிதைப் புத்தகங்களை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்.
எனது கவிதை ஞானம் கொஞ்சம் விசாலமடையலாம்.
மிகவும் நன்றி.
Post a Comment