விழித்துத் தலை உலுக்கியும்
விலகாத கனவுகள்
உதைத்து விரட்டியும்
தொடரும் நிழல்
இறங்கிய பின்னும் தலைக்குள்
சுற்றும் குடை ராட்டினம்
ஒரு வேலையும் செய்யாவிடினும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்புள்
அஸ்தமனம் ஆனபோதும்
அணைந்திடாத வெளிச்சம்
ஆழச் செருமி உமிழ்ந்தபின்னும்
அடங்கிடாத கமறல்-
திறந்த வாய்ப் பிம்பத்தில்
உள்நாக்காய்ச் சிரிக்கும் முதற்காதல்.
October 4, 2007
எச்சம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒன்றுமில்லை... இதைப்பற்றிக் கூற...
நல்ல வரிகளாய் வந்துகொண்டிருந்துவிட்டு, கடைசியில் இந்த முதல் காதலுக்குத்தானா என்ற ஒரு வெறுமையைத் தந்துவிட்டது. கவிதைகள் கடைசி வரியை நோக்கி விரைந்து, கடைசி வரியில் ஒரு திடுக்கிடல் அல்லது பன்ச்சில் புரிதல் கொள்ளும் வழக்கு அவுட் டேட்டட் ஆகிவிட்டது. தலைப்பை வைத்து கவிதை எழுதுவது, கடைசி வரியில் புரிய வைக்கும் கவிதை எழுதுவது போன்ற கவிதைகளைப் படித்து படித்து பெரும்பாலானவர்களுக்குச் சலித்துவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி ஜெயக்குமார்.
ஹரன்பிரசன்னா,
அருமையான விமர்சனம்.
மிகவும் பயனுள்ளதும் கூட.
மிக்க நன்றி.
ப்ரகாஷ்..ஆனால் இதெல்லாம் ஒரு கவிதை கேட்டகரியில் எப்படி கொண்டுவர விரும்புகிறீர்கள்???
இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்..
nandraka ullathu kavithaikal.
சுப்ரமணியசாமி,
என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு
மிக்க நன்றி; கண்டிப்பாக நன்றாக எழுதுவேன்.
Post a Comment