November 17, 2007

சாவி

நடுத்தெருவில் கிடந்ததொரு சாவி.
தவறி விழுந்ததோ
வலுவில் வீசப்பட்டதோ.
எத்தனையோ கால்கள் பட்டு
விழுந்த இடம்,இருக்குமிடம்,
போகுமிடம் ஏதுமறியாது,
இப்போது என் கையில்.
அங்கேயே போட்டாலும்
எடுத்துக் கொண்டு சென்றாலும்
எந்த நிகழ்வின் நகர்வும்
திரும்ப மீள முடியாத்
தவறான திசை நோக்கியே.
பூட்டின் உலகம் திறக்கும் சாவியின்
பூட்டிய உலகம் திறக்கப் படாமல்
அதன் கையில் அதனையே வைத்துக்
குழம்பியபடி நடுத்தெருவில்.

2 comments:

ஹரன்பிரசன்னா said...

//தவறான திசை நோக்கியே.//

எல்லா நகர்வும் தவறான திசை நோக்கித்தானா?

பிரகாஷ் said...

நன்றி பிரசன்னா.
//எல்லா நகர்வும் தவறான திசை நோக்கித்தானா?//
ஆம். அது ஒரு dilemma or catch-22 situation போல.